ஒருநாள் தொடர்: 3-0 என தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 'ஏ' அணி 'டாக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் 'ஏ' அணி 3 அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் விளையாடியது.

அந்த அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது.

மழைக் காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக விளையாடி 5 விக்கெட்டுக்கு 305 ஓட்டங்களை எடுத்தது.

அணித்தலைவர் ஜாசன் முகமது 108 பந்தில் 105 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), அன்ட்ரு மெக்கார்த்தி 75 பந்துகளில் 3 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் என 102 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக நுவன் குலசேகர 9 ஓவர்களை வீசி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாந்து, தசுன் சானாக்க, சஜித் பத்திரன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து வெற்றி இலக்கு எண்ணிக்கை 'டாக்வொர்த் லீவிஸ்' முறையில் மீண்டும் குறைக்கப்பட்டு 38 ஓவர்களில் 257 ஓட்டங்கள் என இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிதானமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தது.

இருப்பினும் 38வது ஓவரில் இலங்கை அணியால் 7 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 'டாக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் குணத்திலகா 60 பந்தில் 58 ஓட்டங்களும், ஷனக 33 ஓட்டங்களும், சிறிவர்த்தனே 35 ஓட்டங்களும், பதிரணா 20 பந்தில் 34 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை மேற்கிந்திய தீவுகள் ஏ அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments