செயற்கை கால் கழன்றது! ஒற்றை காலுடன் பீல்டிங்கில் அசத்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள துபாய் பெருநகரில் பல நாட்டு அணிகள் பங்கேற்கும் ஊனமுற்றோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

அதில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.

பாகிஸ்தான் பேட்டிங் ஆடிய போது அந்த அணி பேட்ஸ்மேன் பந்தை வேகமாக அடிக்க பந்து பவுண்டரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் பீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து வீரர் லியம் தாமஸ் பந்தை தடுக்க முயன்ற போது அவரின் ஒரு செயற்கை காலானது கழண்டு தனியாக விழுந்தது.

அதை அவர் பொருட்படுத்தாமல் ஒரு காலில் நொண்டி கொண்டே அந்த பந்தை பவுண்டரிக்கு போக விடாமல் எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார்.

இதை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் அவருக்கு கைதட்டி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி அவரின் தன்னம்பிக்கையை பாராட்டினார்கள்.

நடந்து முடிந்த அந்த இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments