இலங்கை கிரிக்கெட்டில் சூது! அமைச்சர் மூலம் அம்பலம்

Report Print Agilan in கிரிக்கெட்

தற்போது இலங்கை கிரிக்கெட் சூதாகிப் போய் விட்டது என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக வீரர்களை சேர்த்துக்கொள்வது முதல் விளையாட்டு வரை அனைத்துமே ஊழல்களின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றது.

இங்கு பிரதானமாக அமைவது பணம் மட்டுமே. விளையாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பேரம் பேசப்படுகின்றது பணத்தை அடிப்படையாகக்கொண்டே ஒப்பந்தங்கள் இடப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நல்லாட்சியில் காணப்படும் சில அமைச்சர்களின் முறையற்ற இந்த செயல் விளையாட்டு வீரர்களின் மன அமைதியை சீர்குழைக்கின்றது. அவர்களால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதேவேளை தற்போதைய கிரிக்கெட் அணியின் தெரிவிக்குழு மற்றும் சில முறையற்ற அமைச்சர்களின் செயலால் இலங்கை கிரிக்கெட் அணி தனது தனித்துவத்தினை இழந்து வருகின்றது எனவும் அர்ஜுன ரணதுங்க கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments