அஸ்வின், ஹர்பஜன் சிங் யார் சிறந்தவர்? புள்ளி விவரம் சொல்லும் உண்மை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் விளையாடும் பிட்சுகள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதன் காரணாமாகவே சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார்கள் எனவும் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது உள்ள பிட்சுகள் போன்று தாங்கள் விளையாடும் காலங்களில் இருந்திருந்தால், தானும், கும்ப்ளேவும் எங்கேயோ சென்றிருப்போம் என சர்ச்சை எழுப்பினார்.

இதற்கு இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் கோஹ்லி அஸ்வின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் எனவும், பிட்சை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டிய நிலைமை தேவையில்லை என கூறியிருந்தார்.

இதனால் அஸ்வினுக்கும், ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே பனிப்போர் நிலவியுள்ளது.

இதன் காரணமாக இருவரில் யார் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் சராசரிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஹர்பஜன் சிங் 190 இன்னிங்ஸ் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் சராசரி 32.46. ஆனால் அஸ்வினோ 72 இன்னிங்ஸ்வ் விளையாடி இதுவரை 220 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் சராசரி 24.28.

அது மட்டுமில்லாமல் அஸ்வின் தன்னுடைய 100 வது விக்கெட்டை 39 வது டெஸ்ட் போட்டிகளிலே நிகழ்த்தினார். ஆனால் ஹர்பஜன் சிங்கோ 39 வது டெஸ்ட் போட்டியின் போது 48 விக்கெட்டுகள் அஸ்வினை விட பின் தங்கி இருந்தார்.

இதே போன்று இந்திய மண்ணிலும் மற்று வெளிநாட்டு மண்ணிலும் ஹர்பஜன்சிங் ஐ விட அஸ்வினே சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் இந்திய மண்ணில் சராசரியாக விக்கெட் வீழ்த்துவதற்கு 64 பந்துகள் வீசுவார் என கூறப்படுகிறது, ஆனால் அஸ்வினே 20 பந்துகள் வீசுவதற்குள்ளேயே விக்கெட் வீழ்த்திவிடுவார் என கூறப்படுகிறது.

இதே போன்று வெளிநாடுகளில் சராசரியாக அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்துவதற்கு 62 பந்துகள் தேவைபடுகின்றன. ஆனால் ஹர்பஜன் சிங்குகோ 76 பந்துகள் தேவைபடுவதாக கூறப்படுகிறது.

இந்த புள்ளி விவர்ங்களை வைத்து பார்க்கையில் ஹர்பஜன் சிங் கூறுவது போலவே இந்திய மண்ணில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டாலும், வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக செயல்பட முடிகிறதே அது எப்படி என கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ புள்ளி விவரங்களை வைத்து பார்க்கையில் ஹர்பஜன் சிங் ஐ விட அஸ்வின் சற்று சிறப்பாகவே செயல்படுவது போன்று தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments