சதம் போட்டார் கோஹ்லி: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் கோஹ்லி துடுப்பாட்ட்த்தை தேர்வு செய்தார்.

தொடக்க வீரராக கவுதம் கம்பீர் களமிறங்கினார். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கம்பீர் களமிறங்கி 29 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதன்பின்னர் புஜாரா, கோஹ்லி ஜோடி விக்கெட் விழாமல் நிதானமாக விளையாடினர். இந்த நிலையில் புஜாரா 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

பின்னர் ரஹானே, கோஹ்லியுடன் இணைந்து சிறப்பாக ஆடினர். அவர் 77வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அரை சதத்தினை கடந்தார்.

இதேபோல் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த அணித்தலைவர் கோஹ்லியும் சதமடித்தார். அவர் 184 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை எட்டினார்.

இது டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் 13வது சதமாகும். அதேபோல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் 38வது சதமாகும்.

இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் குவித்துள்ளது. கோஹ்லி (103), ரஹானே (79) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments