2 வருடத்திற்கு பிறகு வாய்ப்பு: வானவேடிக்கை காட்டிய கம்பீர்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இதில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற கவுதம் கம்பீர் தொடக்க வீரராக களமிறங்கினார்.

அவர் 53 பந்தில் 29 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பவுல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். 3 பவுண்டரி, 2 சிக்சர்களையும் அவர் பறக்கவிட்டார்.

முன்னதாக களமிறங்கிய தொடக்க வீரர் முரளிவிஜய் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

புஜாரா (41) சிறப்பாக ஆடிவந்த நிலையில் சாண்ட்னர் பந்தில் பவுல்ட் ஆனார்.

இந்திய அணி 53 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை குவித்துள்ளது.

தற்போது அணித்தலைவர் விராட் கோஹ்லி (38), ரஹானே (13) ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments