கோஹ்லி எல்லாம் சும்மா.. அஸ்வின் தான் இப்போ டாப்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகலதுறை வீரராக ஜொலித்து வருகிறார்.

2016ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய தரப்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் அஸ்வின் தான். 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

அதே போல் துடுப்பாட்டத்திலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 5 டெஸ்டில் 2 சதம் உள்பட 275 ஓட்டங்கள் சேர்த்து முதலிடம் வகிக்கிறார்.

லோகேஷ் ராகுல் 268 ஓட்டங்களும் , ரஹானே 261 ஓட்டங்களும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 260 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பவுலரான அவர் பேட்டிங்கில் முத்திரை பதித்திருப்பது ஆச்சரியமான விடயம் தான்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments