நியூசிலாந்து வீரர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: இந்திய அணிக்கு கிடைக்கலையே!

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லாதம், கேன் வில்லியம்ஸ் அதிர்ஷ்டவசமாக அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 318 ஓட்டங்களுக்குள் அனைத்தும் விக்கெட்டுகளையும் இழந்தது.

அதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் குப்தில் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதற்கு அடுத்த படியாக நியூசிலாந்து அணியை கையில் எடுத்து கொண்டு ஆடிய டொம் லதம், கனெ வில்லியம்ஸ் இந்திய அணியினரின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடினர்.

இதனால் நியூசிலாந்து அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

ஆனால் இதற்கு காரணம் இருவரின் அதிர்ஷ்டம் தான். ஆட்டத்தின் 32 வது ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் வில்லியம்சின் ஹெல்மட் மீது பந்து பட்டு, ஹெல்மட்டின் உதிரி பாகம் ஸ்டம்ப்பில் பட்டது. ஆனால் ஸ்டம்ப்பில் உள்ள பைஸ் கீழே விழவில்லை.

அதே போல ஆட்டத்திம் 37 வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்து வீச்சில், லாதம் லெக் திசையில் அடிக்க அதை சிலிப்பில் நின்ற ராகுல் பிடித்தார். ஆனால் ராகுல் பிடித்த கேட்ச் அவர் அணிந்திருந்த ஹெல்மட் மீது உரசியது.

ஐசிசி விதிப்படி ஹெல்மட் மீது பந்து பட்டு கேட்ச் பிடித்தால், அது கேட்ச் என எடுத்துக்கொள்ளபடமாட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments