அதிர வைத்த அவுஸ்திரேலியா.. சச்சின் போட்ட கணக்கு: 2003ம் ஆண்டு உலகக்கிண்ண சுவாரஸ்யம்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் போது அணியில் உள்ள இளம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.

ஷேவாக் கூட தான் பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முறையாக முச்சதத்தை தொடும் போது சச்சினின் ஊக்குவிப்பை நினைவு கூர்ந்து பேசியிருந்தார்.

ஷேவாக் கூறுகையில், “நான் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி 300 ஓட்டங்களை நெருங்கும் போது மறுமுனையில் இருந்த சச்சின் என்னிடம் வந்து ’இனி சிக்சர் அடித்தால் உன்னை பேட்டால் அடிப்பேன்’என்று நான் ஆட்டமிழக்க கூடாது என்ற அக்கறையில் எச்சரித்து சென்றார்.

அதன் படி நிதானமாக ஆடிய நான் முதன்முறையாக முச்சதம் எடுத்து சாதனை படைத்தேன்” என்றார்.

சச்சின் போட்ட கணக்கு

இது போன்ற ஒரு நிகழ்வு 2003ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் நடைபெற்றது.

கடந்த 2003 ஆண்டு ஜோன்ஸ்பெர்க்கில் நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி பொண்டிங்கின் மிரட்டல் அடியில் 2 விக்கெட் மட்டும் இழந்து 359 ஓட்டங்களை எடுத்தது.

அணித்தலைவர் பொண்டிங் 8 சிக்சர், 4 பவுண்டரி என 121 பந்தில் 140 ஓட்டங்கள் எடுத்து மிரளவைத்தார்.

360 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இந்தியாவுக்கு இமாலய ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் என்ன செய்வது என தெரியாமல் உடைமாற்றும் அறையில் குழம்பி நின்றனர்.

அப்போது அங்கு வந்த சச்சின் அனைவரையும் அழைத்து, ”இது மிகவும் எளிமையான இலக்கு தான். ஓவருக்கு ஒரு பவுண்டரி, 50 பந்தில் 200 ஓட்டங்களை எளிதாக எடுத்து விடலாம்.

அதன் பிறகு 250 பந்தில் தான் மீதமுள்ள 160 ஓட்டங்களை எடுக்கப் போகிறோம். இப்போது சொல்லுங்கள் இது மிகவும் எளிதான விடயம் தானே" என்று ஊக்கம் அளித்துள்ளார்.

இதை கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.

இந்திய அணிக்கு ஏமாற்றம்

இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் கொடுத்த ஊக்கத்தில் முடிந்த வரையில் வீரர்கள் போராடினர்.

தொடக்க வீரராக களமிங்கிய சச்சின் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷேவாக் 82 ஓட்டங்களும், டிராவிட் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து ஏமாற்ற இந்தியா 39.2 ஓவர்களில் 234 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சச்சின் போட்ட கணக்கு படி ஓட்டங்கள் சேர்ந்தாலும், கடைசியில் விக்கெட்டுகள் இல்லாததால் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்று இந்தியா உலகக்கிண்ணத்தை தவறவிட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments