இவன் யாரென்று தெரிகிறதா? வயதானாலும் வானவேடிக்கை காட்டும் சங்கக்காரா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டார்.

ஆனால் அதன் பிறகும் அவர் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார்.

சங்கக்காரா தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த மாதம் நடந்த றொயல் லண்டன் கிண்ணப் போட்டியில் நார்தம்டன்ஷயர் அணிக்கு எதிரான 3வது காலிறுதி ஆட்டத்தில் தடுமாற்றத்தில் இருந்த சர்ரே அணியை அபார சதத்தால் வெற்றி பெற வைத்தார் சங்கக்காரா.

அந்தப் போட்டியில் 11 பவுண்டரி, 2 சிக்சர் என 145 பந்துகளில் 130 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சர்ரே அணி 1 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட சங்கக்காரா 22 இன்னிங்களில் 1000 ஓட்டங்களை எட்டி அசத்தியுள்ளார். இவருடன் மொத்தம் 9 பேர் இந்த மைல்கல்லை எட்டினர். இதில் சங்கக்காரா தான் 2வது அதிக வயது கிரிக்கெட் வீரர் ஆவார். இதில் மார்கஸ் ட்ரெஸ்கோடிக் என்பவருக்கு 40 வயதாகிறது.

தற்போது சங்கக்காராவுக்கு 38 வயதாகிறது. இருப்பினும் சர்வதேச போட்டிகளில் ஆடிய அதே துடிப்புடன், களமிறங்கும் கிரிக்கெட் களத்தில் எல்லாம் அதிரடி காட்டி வருகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments