ஜடேஜாவின் அதிரடியால் மீண்டது இந்திய அணி: தடுமாறி வரும் நியூசிலாந்து அணி

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல் நாள் நேர ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரயாக் இந்திய அணியை கதிகலங்க வைத்தார்.

இதனல் இந்திய அணியில் விஜய், புஜாரா தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அணியின் தலைவர் கோஹ்லி 9 ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

முதல்நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணி ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால், 318 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜடெஜா 44 பந்துகளுக்கு 42 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து சார்பில் கிரயாக் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி சற்று முன்வரை 1 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments