இந்திய அணியின் எதிர்காலம் அவ்வளவு தான்?

Report Print Santhan in கிரிக்கெட்

6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவரை இந்திய தேர்வு குழு அணியின் தலைவராக நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக பதவி வகித்து வந்தவர் சந்தீப் பாட்டீல்.

இவரது பதவி காலம் தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து, இந்திய அணியின் புதிய தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத் என்பவரை பிசிசிஐ நியமித்துள்ளது.

பொதுவாக ஒரு அணியின் தேர்வு குழு தலைவராக இருப்பவர், அந்த விளையாட்டைப்பற்றி அனைத்தும் தெரிந்தவராக இருக்க வேண்டும். அதில் சிறந்த அனுபவசாலியாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.கே.பிரசாத் 6 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டையும் சேர்த்து மொத்தமே 237 ஓட்டங்கள் தான் எடுத்துள்ளார்.

ஒரு அரைசதம், டெஸ்ட்போட்டிகளில் அதிகபட்சமாக 19 ஓட்டங்கள், விக்கெட் கீப்பராக இருந்து இவர் பிடித்த கேட்சுகள் 29, மொத்தம் 7 ஸ்டம்பிங்க் என இவர் சாதித்ததே இவ்வளவு தான்.

இவரை எப்படி தேர்வு குழுத்தலைவராக பிசிசிஐ அறிவித்துள்ளது என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் மட்டும் தான் இப்படி என்றால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஐந்து பேருமே போதிய அளவுக்கு அனுபவம் இல்லாதவர்கள் போல் தான் தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments