டோனி பற்றிய உண்மையை போட்டுடைத்தார் தேர்வுக்குழு தலைவர்!

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

சந்தீப் பாட்டீல் கூறியதாவது, டெஸ்ட் போட்டியிலிருந்து டோனி ஓய்வு பெற்றது அவரது சொந்த முடிவு. அது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

கவுதம் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததிற்கும் டோனிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை தேர்வு செய்யாதது, தேர்வுக்குழுவின் முடிவு.

என்னுடைய பதவிக்காலத்தின் போது பல நிகழ்ச்சிகளில் டோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவது பற்றி விவாதித்தோம். அதன் பிறகு புதிய தலைவரை நியமித்து அவருக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும் யோசித்தோம்.

ஆனால், 2015ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மனதில் கொண்டு டோனியை தலைவர் பதவியை தொடரச் செய்தோம். தற்போது விராட் கோலி கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments