500வது டெஸ்ட்.. மோதிக் கொள்ள தயாரான இந்தியா- நியூசிலாந்து

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் நாளை கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இவ்விரு அணிகள் முதல் டெஸ்டில் மோதிக் கொள்கின்றன.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியை காண இந்திய முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரு அணிகளும் மோதுவது 55வது முறையாக ஆகும். இதுவரை மோதியுள்ள 54 போட்டியில் இந்தியா 18 ஆட்டத்திலும் நியூசிலாந்து 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 26 போட்டி டிரா ஆனது.

அதேபோல் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதுவரை 10 முறை இந்தியா வந்துள்ள அந்த அணி வெறும் கையோடுதான் திரும்பி உள்ளது.

கடைசியாக 2012ல் நியூசிலாந்து அணி இந்தியா வந்து தொடரை இழந்தது. இந்த முறை எப்படியாவது டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் அந்த அணி உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments