நீயா? நானா? யாருக்கு இடம்: பட்டையை கிளப்பும் இந்திய வீரர்கள் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ரோஹித்தா, புஜாராவா யார் சிறப்பாக பயிற்சி செய்கிறார்கள் என்பது போல வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அறிவிக்கப்பட்டதில் ரோகித் சர்மா, தவான் ஆகியோருக்கு அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட காம்பீருக்கு இடம் மறுக்கப்பட்டது.தூலீப் தொடரில் சிறப்பாக செயல்படாத ரோகித் சர்மாவுக்கு இடம் வழங்கப்பட்டது. இதனால் ரோகித்சர்மா கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

Cheteshwar Pujara and @rohitsharma45 are batting partners on net number 1 #IndvNZ @paytm

A video posted by Team India (@indiancricketteam) on

தற்போது இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கும், புஜாராவுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதில் யாருக்கு இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் இன்ஸ்டிராகிராமில் இருவரும் பயிற்சி செய்வதை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதில் யாருக்கு இடம் என்பது கோஹ்லி கையில் தான் உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமணன் கூறுகையில், ரோகித் சர்மா ஒருநாள், டி20 போட்டிகளுக்கு சிறந்தவர் என்றும், தற்போது நடைபெற்று முடிந்த துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட புஜாராவை தேர்ந்தேடுப்பதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments