உலகின் சிறந்த வேகப்புயல் இவர்கள் தான்! மனம் திறந்த "அதிரடி புயல்" கில்கிறிஸ்ட்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர்கள் தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளங்கிய கில்கிறிஸ்ட், அவர் விளையாடும் போது அதிரடியால் எதிரணிக்கு பயம் காட்டுவார்.

இவருக்கு பந்துவீச வேண்டும் என்றால் உலக பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்பட தான் செய்யும்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நீண்ட வருடங்களாக தொடர்ச்சியாக சிறந்த வகையில் பந்து வீசி வரும் டேல் ஸ்டெயின் ஆகியோர் தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், டாப் பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் மிட்செல் ஸ்டார்க் சிறந்த டாப் பந்துவீச்சாளராக அசத்துவார்.

எந்தவொரு சாம்பியனுக்கும் நீண்ட நாட்கள் விளையாடுவது மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் நீண்ட கால காயத்தில் இருந்து மீண்டு வந்த டேல் ஸ்டெயின், மிகவும் அபாரமாக பந்து வீசுகிறார்.

இந்த தலைமுறையின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் அவரைப்போல் ஆக வேண்டும் என்று விரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments