டோனி மீது கம்பீர் மறைமுக தாக்குதல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

வாழ்க்கையை படமாக்கும் அளவுக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு தகுதி இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், யூரி தாக்குதலில் வீர மரணமடைந்த 17 பேரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படமெடுப்பது சிறந்த விடயமாகும். நாட்டுக்காக குறைந்த சம்பளத்தில் சேவையாற்றும் அவர்களை விட வேறு என்ன சிறந்ததாக இருக்க முடியும்.

பல சலுகைகள் பெற்று வாழும் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை எதற்கு படமாக்கப்பட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் 30 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறை கூறும் M.S Dhoni - The UnTold Story என்னும் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் கம்பீர் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments