படுத்து தூங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்: மிஸ்பா புலம்பல்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

உள்நாட்டு கட்டமைப்பில் உள்ள குறைபாடே ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பின் தங்கி இருக்க முக்கிய காரணம் என்று டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா கூறியுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.

மிஸ்பா தலைமையிலான டெஸ்ட் அணி ஜொலித்துக் கொண்டிருக்கும் போது, இளம் வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 அணி தடுமாறி வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போவதற்கு உள்நாட்டு கட்டமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் மிஸ்பா.

அவர் மேலும் கூறுகையில், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக போட்டிகளை நடத்த வேண்டும் என்று நான் நீண்டகாலமாக கூறி வருகிறேன்.

ஒருநாள் தொடருக்கு குறைந்த முக்கியதுவமே கொடுக்கப்படுகிறது. கிளப் லெவலில் கூட ஒருநாள் தொடர் நடைபெறுவதில்லை. அப்படி என்றால் நம்மால் இந்த வகை கிரிக்கெட்டில் வளர முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments