நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு: கோரி ஆண்டர்சன்

Report Print Abhimanyu in கிரிக்கெட்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 3 டெஸ்ட் போட்டிகள் வருகின்ற 22ம் திகதி முதல் துவங்கவுள்ளது.

இதன்பின் 5 ஒருநாள் போட்டி தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கின்றது. இதற்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் நீண்ட நாட்களாக முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக நியூசிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த மிரட்டல் வீரர் ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சன், மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

நியூசிலாந்து அணி தொடர்பான விபரம்

கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், பவுல்ட், பிரேஸ்வெல், டெவ்ரிச், கப்டில், மாட் ஹென்ரி, டாம் லதாம், ஜேம்ஸ் நீசம், ரான்கி, மிட்செல் சாண்டர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், வாட்லிங்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments