ஹாட்ரிக் சாதனை படைத்த தூத்துக்குடி வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

டிஎன்பில் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தூத்துக்குடி சுழற்பந்து வீச்சாளர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போலவே தமிழ்நாட்டில் TNPL என்ற தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் சென்னை சேப்பாக்ஸ் அணியும், தூத்துக்குடி பாட்ரியஸ் அணிகளும் மோதின.

இதில் TNPL இல் பலம் வாய்ந்த அணியாக இருந்த சென்னை சேப்பாக்ஸ் அணியை தனது சுழற்பந்து வீச்சு மூலம் கதிகலங்க வைத்தார் தூத்துக்குடி வீரர் கணேஷ்மூர்த்தி.

இரண்டாவது ஆட்டத்தின் போது சென்னை சேப்பாக்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை தூத்துகுடி அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி வீசினார்.

இதில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான சற்குணம், கோபிநாத், சதீஷ் என அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அது மட்டுமில்லாமல் ஒவரின் ஐந்தாவது பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இது TNPL இல் எடுத்த இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் ஆகும். இதற்கு முன்னர் கோவை கிங்ஸ் வீரர் சிவக்குமார் தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய தூத்துக்குடி அணி 216 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சேப்பாக்ஸ் அணி 93 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments