11 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம் பிடித்த வீரர்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மொயீன் அலி, அடில் ரஷித் ஆகியோடு சுழற்பந்து வீச்சாளரான கரேத் பட்டி இடம்பிடித்துள்ளார்.

39 வயதாகும் கரேத் பட்டி 11 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2003ம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிரான டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் இங்கிலாந்து அணியில் அவருக்கு இடம்கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பி உள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி விபரம்:

அலைஸ்டர் குக் (அணித்தலைவர்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாபர் அன்சாரி, ஜானி பேர்ஸ்டோவ், கேரி பேலன்ஸ், கரேத் பட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டீவன் பின், ஹஸீப் ஹமீத், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்து ஒருநாள் அணி விபரம்:

ஜோஸ் பட்லர் (அணித்தலைவர்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், லியாம் டவ்சன், பென் டக்கெட், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வி்ல்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments