கோஹ்லியிடம் சரணடைந்த பிரபல அவுஸ்திரேலிய வீரர்!

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி தனது பந்துவீச்சையும் மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடிப்பார் என முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடரைப்போல, தமிழகத்தில் முதல் முறையாக தமிழக் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் காஞ்சியின் அணியின் ஆலோசகராக முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ உள்ளார்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் பேட்டியின் போது பிரட் லீயிடம், விராட் கோஹ்லி குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், விராட் கோஹ்லி சிறப்பான பார்மில் உள்ளதால் எனது பந்துவீச்சையும் சிதறடிப்பார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தற்போது உலகில் உள்ள துடுப்பாட்டவீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி தான் முன்னணியில் உள்ளார். அவர் விளையாடும் விதம் மற்றும் அவரின் ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் ஆக்ரோஷம் தான் அவரை முன்னிலையில் வைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்க்கும் போது ஆட்ட நுணுக்கத்தில் கோஹ்லி பல விதங்களில் முன்னேறியுள்ளார்.

தற்போது அவர் உள்ள பார்மை வைத்து பார்க்கும் போது எனது பந்துவீச்சையும் அவர் மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடிப்பார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments