இந்திய அணிக்காக சச்சின் செய்த பெருந்தன்மைய பாருங்க!

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான போட்டியில் தன்னுடைய சதத்தை அடிக்கவிடாமல் தடுத்த தினேஷ் கார்த்திக்கிடம், சதத்தை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் என்று சச்சின் சொன்ன வார்த்தை அவரது பெருந்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 239 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெறும் தருவாயில் இருந்தது.

அப்போது அணியின் வெற்றிக்கு 8 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சச்சின் களத்தில் 91 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருந்தார்.

அதைத் தொடந்து மலிங்கா வீசிய பந்தை எதிர் கொண்ட சச்சின் அப்பந்தை நான்கு ஓட்டங்கள் விளாச, சச்சின் ஓட்டம் 95 ஆக மாறியது, அடுத்த பந்தை எதிர்கொண்ட சச்சின் அதில் ஒரு ஓட்டம் எடுத்ததன் மூலம் 96 ஓட்டங்கள் ஆனது. இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இதனால் சச்சின் சதம் அடிக்கவேண்டும் என்பதற்காக, தினேஷ் கார்த்திக் ஆடாமல் அடுத்த ஓவரில் சச்சினுக்கு வாய்ப்பு கொடுப்பார். இது சச்சினின் 46 வது சதமாக மாறும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால் தினேஷ் கார்த்திக்கோ அப்பந்தை நான்கு ஓட்டங்கள் அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் சச்சினோ சதத்தை பற்றி கவலைப்படாமல் இலங்கை வீரர்களிடம் கைகுலுக்கி கொண்டிருந்தார்.

தினேஷ் கார்த்திக் வந்து சச்சினிடம் மன்னிப்பு கேட்ட போது, அவர் சதம் முக்கியமில்லை, இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் என கூறியிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அவரது மதிப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments