ஏ.பி.டிவில்லியர்ஸ் சுயசரிதையில் அதிர்ச்சி தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

2015 உலகக் கிண்ண அரையிறுதி போட்டிக்கு முன்னால் அணியில் நடந்த மாற்றங்களுக்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது சுயசரிதை நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற உலக கிண்ணம் முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஆப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் தனது சுயசரிதை வெளியிட்டுள்ளார்.

அதில் 2015ம் ஆண்டு அரையிறுதி போட்டியின் போது நடந்து முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“2015 உலகக்கோப்பை காலிறுதியில் இலங்கையை வென்றோம். கிட்டத்தட்ட அரையிறுதியில் அதே அணியுடன்தான் களமிறங்குவோம் என நினைத்தோம்.

அரையிறுதிக்கு முந்தைய நாள் இரவு, அணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன், ‘வெர்னன் பிலாண்டர் ஃபிட்டாக இருக்கிறார்.

நாளை நடக்கும் அரையிறுதியில் ‘கைல் அபோட்’டுக்குப் பதிலாக பிலாண்டரை களமிறக்க வேண்டும் என ஒருவர் எனக்கு அழைப்பு விடுத்தார் என தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அழைப்பு விடுத்தவர் யார் என்பதை குறிப்பிடவில்லை.

இப்போதும் கூட, அணித் தேர்வில் நடந்த அரசியல் குறித்து வசைபாடவில்லை. ‘மூன்று ரன் அவுட், இரண்டு கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தோம், அதனால்தான் தோற்றோம்.

அபோட்டுக்குப் பதிலாக பிலாண்டரை அணியில் சேர்த்ததால் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments