இந்திய கிரிக்கெட்அணியின் தலைவரான டோனி தனது இன்ஸ்டராகிராமில் தலைவர் ரஜினியை போல் போஸ் கொடுக்க முயற்சித்துள்ளேன் என கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவரான டோனி தற்போது விடுமுறையில் உள்ளதால் விடுமுறையை பல்வேறு விதமாக கழித்து வருகிறார்.
அதிலும் அவரது சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தான் செய்யும் புது விதமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்குமுன்னர் தனது குழந்தையுடன் செய்த லூட்டியை பதிவேற்றம் செய்திருந்தார்.
அதுபோல தற்போது உலகில் உள்ள அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்போடு வெளிவந்த படம் தான் காபாலி, அதில் ரஜினி கால்மேல் கால் போட்டு இருக்கும் புகைபடத்தை போலவே டோனியும் முயற்சி செய்துள்ளார்.
தற்போது அவர் தன் இன்ஸ்டாகிராமில், தான் ஒரு ரஜினிகாந்தின் தீவீர ரசிகர் என்றும், நமது தலைவர் ரஜினியைபோல போஸ் கொடுக்க முயற்சித்துள்ளேன் என அடக்கமாக கூறியுள்ளார்.
டோனியின் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.