“ஒயிட்-வாஷ்” ஆன அவுஸ்திரேலியா: உடைமாற்றும் அறையில் நடந்த சுவாரஸ்யம்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
628Shares

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் இலங்கையின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா, தொடரை 2-0 என இழந்தது.

இந்நிலையில் கொழும்பில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் ஆதிக்கமே அதிகமாக காணப்பட்டது. கடைசி நாளான நேற்று இலங்கை அணி, அவுஸ்திரேலியாவுக்கு 324 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியை சூறையாடினார் ஹேரத். அவர் 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் கைப்பற்ற அவுஸ்திரேலியா 160 ஓட்டங்களில் சுருண்டது.

இதனால் 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை தொடரை 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

’ஒயிட்-வாஷ்’ ஆன அவுஸ்திரேலிய அணி ஆசிய மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

கடந்த 2012-13ல் இந்தியாவுக்கு எதிராக 0-4 என கோட்டை விட்ட அவுஸ்திரேலியா, 2014-15ல் பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை 0-2 என பறிகொடுத்தது.

இந்நிலையில் 3வது முறையாக இலங்கை அணிக்கு எதிராக 3-0 என தொடரை இழந்துள்ளது.

இதன் பின்னர் சுவாரஸ்ய நிகழ்வாக இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறைக்கு சென்று கலந்துரையாடினர்.

இந்த சுவாரஸ்ய புகைப்படங்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments