இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 0-3 என இழந்ததை தொடர்ந்து, டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-0 என்ற வெற்றி கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரினிடாட் போர்ட் மைதானத்தில் ஆகஸ்ட் 18ம் திகதி தொடங்கி நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வெற்றிப்பெற்று முதலிடத்தை தக்க வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.