அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் தன்னை சீண்டிய இலங்கை ரசிகரை கலாய்த்துள்ளார்.
அவுஸ்திரேலியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இதில் பல்லேகலவில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் 176 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளித்தார்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் தோல்வியை இலங்கை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில் இலங்கை ரசிகர் ஒருவர் முன்னாள் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு ஒரு டுவிட் செய்தார்.
அதில், ’நீங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர், குஷால் மெண்டிஸ் அறிமுகம் ஆவதற்குள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மிட்செல் ஜான்சன், ’ஆமாம்.. அந்த குசால் மெண்டிஸ் யார்? ’என்று பதிலளித்து அந்த ரசிகரை கிண்டலடித்தார்.
காலே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா மண்ணை கவ்வ, இலங்கை தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
@nibrazramzan who's that? 🤔
— Mitchell Johnson (@MitchJohnson398) August 3, 2016