அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஹொட்டலில் இருந்து காலே மைதானத்திற்கு ஹெலிகொப்டரில் வந்திறங்குவது போன்ற வீடியோவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் வீரர்கள், தங்கியிருக்கும் ஹொட்டலில் இருந்து காலே மைதானத்திற்கு ஹொலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
ஹொட்டலின் அருகில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகொப்டர் இறங்கியது முதல் மைதானத்திற்கு செல்லும் வரையிலான நிகழ்வுகளை அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த காட்சிகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
காலேயில் நடந்த இந்தப் போட்டியில் 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.