டேரன் சமியின் உருக்கமான வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்
339Shares

சமீபத்தில் தன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தவர் டேரன் சமி.

தற்போது அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 6 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் இனிமேல் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட் அணித்தலைவராக செயல்பட முடியாது, இனிமேலும் செயல்பட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, மேற்கிந்திய கிரிக்கெட் தெரிவு குழு தலைவரிடமிருந்து தனக்கு செல்போனில் அழைப்பு வந்ததாகவும், அதில் தனது செயல்பாட்டில் குறை இருப்பதால் 20 ஓவர் அணித்தலைவராக செயல்பட புதிய வீரரை தெரிவு செய்துள்ளதாகவும், இனி அணித்தலைவராக தொடர முடியாது எனவும் தெரிவித்ததாக டேரன் சமி கூறியுள்ளார்.

மேலும், குழு தலைவர்கள் எதிர்கால அணியை உருவாக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக நான் கருதுகிறேன், புதிததாக நியமிக்கப்படவுள்ள அணித்தலைவருக்கு எனது வாழ்த்துகள்.

எனினும் இரண்டு சாம்பியன் பட்டம் என் தலைமையில் பெற்றுதந்தது என்றும் நினைவிலே இருக்கும். எனக்கு இந்த நாள் வரை ஆதரவு அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இதன் மூலம் நான் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக யாரும் கருத வேண்டாம் நான் தொடர்ந்து விளைாயாடுவேன், எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments