முதன்முறையாக இரட்டை சதம் விளாசினார் விராட் கோஹ்லி!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
முதன்முறையாக இரட்டை சதம் விளாசினார் விராட் கோஹ்லி!
351Shares

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதன்முறையாக இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது.

இதில் இந்தியா நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 302 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அணித்தலைவர் கோஹ்லி 143 ஓட்டங்களுடனும் (197 பந்துகள், 16 பவுண்டரி), அஷ்வின் 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து அசத்திய விராட் கோஹ்லி முதன்முறையாக இரட்டை சதம் விளாசினார். அதே சமயம் முறுமுனையில் நிதானமாக ஆடிய அஸ்வின் அரைசதம் அடித்தார்.

உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 404 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (200), அஸ்வின் (64) தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments