விராட் கோஹ்லி படைத்த புதிய சாதனை

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
விராட் கோஹ்லி படைத்த புதிய சாதனை
633Shares

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 134 பந்தில் சதம் விளாசினார். அவர் 7 ஓட்டங்களை எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

மேலும், டெஸ்ட் தலைவரான பிறகு கோஹ்லி (12 இன்னிங்ஸ்) 5 சதங்களையும் வெளிநாட்டில் தான் எடுத்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு வெளியே அதிக சதங்கள் எடுத்த இந்திய தலைவர் அசாரூதின் (5 சதங்கள், 41 இன்னிங்ஸ்கள்) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 302 ஓட்டங்களை எடுத்துள்ளது. அணித்தலைவர் விராட் கோஹ்லி 143 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments