பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் அலாஸ்டர் குக் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி, முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி வருகிறது.