4 புதுமுக வீரர்களுடன் பலமான அவுஸ்திரேலியாவை சந்திக்கும் இலங்கை

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
4 புதுமுக வீரர்களுடன் பலமான அவுஸ்திரேலியாவை சந்திக்கும் இலங்கை
228Shares

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் எதிர்வரும் 26ம் திகதி பல்லேகலேவில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 புதுமுக வீரர்கள் இடம்பிடிதுள்ளனர்.

ஆசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, லக்‌ஷன் சண்டாகன் மற்றும் ரோஷன் சில்வா ஆகியோர் புதுமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.

அதே சமயம் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணிக்கு தலைவராக இருந்த மிலிந்தா ஸ்ரீவர்தனா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணி்க்கெதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அறிமுகமான சகலதுறை வீரர் தனஞ்ஜெயா டி சில்வாவும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு தலைவராக மேத்யூசும், துணை தலைவராக சந்திமாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள் விவரம்

மேத்யூஸ் (தலைவர்), தினேஷ் சந்திமால் (துணை தலைவர்), திமுத் கருணாரத்னே, கவுசல் சில்வா, குஷால் ஜனித் பெரேரா, குஷால் மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, ரோஷன் சில்லா, நுவான் பிரதீப், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லக்‌ஷன் சண்டாகன், சுரங்கா லக்மல்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments