இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்!
450Shares

இலங்கை யாழ்ப்பாணத்தில் ரூ. 400 மில்லியன் செலவில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை யாழ்ப்பாணத்தில் கட்ட திட்டமிட்டுள்ளோம்

சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நவம்பர் மாதம் தொடங்கும்.

3 ஆண்டுகளில் இந்த பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும். இருப்பினும் இது கட்டப்படும் இடம் இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. இதற்கான மொத்த செலவையும் கிரிக்கெட் வாரியம் ஏற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments