கோஹ்லி, கும்பளே இடையேயான உறவு சிறப்பாக இருக்கும்: கார்ட்னி வால்ஷ்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
கோஹ்லி, கும்பளே இடையேயான உறவு சிறப்பாக இருக்கும்:  கார்ட்னி வால்ஷ்
135Shares

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக அனில் கும்பளேவை நியமித்தது சரியான முடிவு என மேற்கிந்திய தீவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் கும்பளே பங்களிப்பு எப்போதும் இருக்க வேண்டும், அணித்தலைவராக செயல்பட்ட போது தனக்கென செயல்படாமல் இந்திய அணியை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர்.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அணியின் தலைவர் மற்றும் பயிற்சியாளர் உறவு சுமுகமாக இருக்க வேண்டும். அந்த வகையில் கோஹ்லி,கும்பளே இடையேயான உறவு சிறப்பாக இருக்கும் .

மேலும் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர், குறிப்பாக கோஹ்லி உலகின் தலை சிறந்த துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

இது தவிர இந்திய அணியில் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் பலர் உள்ளனர்.

இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கும்பளேவை நியமித்த முடிவு சரியான முடிவு தான்,மேலும் இந்த முடிவை எடுத்ததற்கு இதிய கிரிக்கெட் வாரியத்தை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments