சொதப்பிய இந்திய பந்துவீச்சாளர்கள்...அஸ்வின் அசத்தல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
சொதப்பிய இந்திய பந்துவீச்சாளர்கள்...அஸ்வின் அசத்தல்
712Shares

இந்தியா மற்றும் மேற்கிந்திய லெவன்ஸ் அணி மோதிய இராண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அஷ்வின் தவிர மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் சொதப்ப ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய லெவன்ஸ் தலைவர் அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி ஆட்டம் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய லெவன்ஸ் அணி 180 ஒட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி லொகேஷ் ராகுல் மற்றும் விராட் கோஹ்லி ஆட்டத்தால் 364 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய லெவன்ஸ் தலைவர் அணி கடைசி நாளான நேற்று நிதான ஆட்டத்தை மேற்கொண்டது.

இதனால் லெவ்ன்ஸ் அணி 223 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் மட்டும் இழந்து ஆட்டத்தை டிரா செய்தது.

இதில் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் மட்டும் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதில் 14 ஒவர் வீசிய ரவீந்திர ஜடேஜா 42 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.பெரிதும் எதிர்பார்கப்பட்ட அமித் மிஷ்ரா விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 9 ஓவர் வீசி 17 ஓட்டங்கள் விட்டு கொடுத்தார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டி யூலை 21 ம் திகதி ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments