யாஷிர் ஷா சுழலில் சிக்கிய இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி வெற்றி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
யாஷிர் ஷா சுழலில் சிக்கிய இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி வெற்றி
282Shares

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் யாஷிர் ஷா சுழலில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸ்சில் பாகிஸ்தான் அணி 339 ஓட்டங்களும்.இங்கிலாந்து அணி 272 ஓட்டங்களும் எடுத்திருந்தன.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி 215 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால் பாகிஸ்தான் அணி 283 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்யை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தலைவர் அலெஸ்டர் குக்(Alastair cook) 8 ஓட்டங்களும், அலெக்ஸ் ஹெல்ஸ்(Alex Hales) 16 ஓட்டங்கள் எடுத்து ராகட் அலி (Rahat Ali) பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.பெரிதும் எதிர்பார்கப்பட்ட ஜோ ரூட்(Joe Root) 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேரி பெலன்ஸ் (Gary Ballance) 43 ,ஜானி பெர்ஸ்டவ் (Jonny Bairstow) 48,மொயின் அலி (Moeen Ali) 2 ஆகியோரை யாஷிர் தனது சுழலில் போல்டாக்கினார்.

அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் இங்கிலாந்து அணி 207 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் யாஷிர் ஷா(Yashir Shah) 4 விக்கெட்களையும்,ராகட் அலி (Rahat Ali) 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியை பாகிஸ்தான் அணியினர் Salute To Victory என்ற முறையில் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய யாஷிர் ஷா வுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

நான்கு டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிற்து.

இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 22 ம் திகதி மான்செஸ்டர்(Manchester) நகரில் நடைபெறுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments