"ஹெலிகொப்டர் ஷாட்" மட்டுமல்ல டோனியிடம் இந்த திறமையும் உள்ளது: உண்மையை உடைத்த ரெய்னா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
474Shares

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி நேற்று முன் தினம் தனது 35வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் #NationalHelicopterDay என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டோனிக்கு வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் இந்திய அணியின் மற்றொரு அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் டோனி புல்லாங்குழல் வாசிப்பது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

ஆடுகளத்தில் ஹெலிகொப்டர் ஷாட்டால் பலப் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த ’கூல் கேப்டன்’ டோனி ’பைக்’ ஓட்டுவதிலும் கில்லாடி. தற்போது புல்லாங்குழல் வாசித்தும் அசத்துகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments