மேற்கிந்திய தீவுகளை வீழ்த்த அஸ்வின் தான் இந்தியவிற்கான துருப்பு சீட்டு: கங்குலி

Report Print Basu in கிரிக்கெட்
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்த அஸ்வின் தான் இந்தியவிற்கான துருப்பு சீட்டு: கங்குலி
227Shares

எதிர்வரும் யூலை 21ம் திகதி தொடங்கவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஒர் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார்.

நேற்று தனது இல்லத்தில் 44வது பிறந்த நாளை கொண்டாடிய சவுரவ் கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய டெஸ்ட் அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கும், அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கும்ளேவிற்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக ஆடிவருகிறது. இருப்பினும் அந்த அணியை வீழ்த்த கூடிய திறமை இந்திய அணிக்கு உள்ளது.

இந்த தொடரில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சு இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரும், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்த அஸ்வின் தான் இந்தியவிற்கான துருப்பு சீட்டு என குறிப்பிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பையை சமீபத்தில்தான் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. அடுத்தடுத்த வெற்றிகளால் அந்த அணி மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் அந்த நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பைனல் வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தென் ஆப்பிரிக்கா 3வது இடத்தைதான் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments