ஹாட்ரிக் வெற்றியை சாதிப்பாரா கோஹ்லி?

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
ஹாட்ரிக் வெற்றியை சாதிப்பாரா கோஹ்லி?
494Shares

2006-ல் ராகுல் திராவிட், 2011-ல் டோனி ஆகியோர் தலைமையில் மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றதையடுத்து கோஹ்லி தற்போது வென்று ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணிகாக சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா, விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் வரும் 21 ஆம் திகதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் - இந்தியா மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம், செயின்ட் கிட்ஸ் வார்னர் பார்க் மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது.

இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் அனுபவ ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரியத் தலைவர் லெவன் அணி லியான் ஜான்சன் தலைமையில் களமிறங்குகிறது. 2வது பயிற்சி ஆட்டமும் இதே மைதானத்தில் 14ம் திகதி தொடங்கி 16ம் திகதி வரை நடைபெற உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments