டோனியின் இடத்தை நிரப்புவது கடினம்: சஹா

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
டோனியின் இடத்தை நிரப்புவது கடினம்: சஹா

டெஸ்ட் போட்டிகளில் டோனி ஓய்வு பெற்றதை அடுத்து விக்கெட் கீப்பராக அந்த இடத்தை நிரப்புவது அவ்வளவு சுலபம் இல்லை என விக்கெட் கீப்பர் சஹா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தொடரையொட்டி, பெங்களூர் பயிற்சி முகாமில் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

3-ஆவது நாளான நேற்று பயிற்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சஹா கூறியதாவது, டோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக அந்த இடத்தை நிரப்புவது சுலபம் இல்லை.

அது மிகவும் கடினம். ஏனெனில் அவர் உலக கிரிக்கெட் சாம்ராஜ்யத்தில் பல சாதனைகளை படைத்தவர்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் டோனியை சந்தித்து பேசிக்கொள்வேன். ஐபிஎல் மற்றும் இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது அவரை சந்தித்தேன், அப்போது அவர் பவுன்ஸ் ஆடுகளங்களில் எப்படி கீப்பிங் செய்வது, துடுப்பாட்டத்தில் நெருக்கடி நிலைமைகளை எப்படி கையால்வது என பல ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் மட்டும் அல்ல மற்ற வீரர்களும் பல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேற்கிந்திய தீவுகள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடி, ஒவ்வொரு போட்டிகளிலும் 70 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பதன் மூலம், எனது இடத்தை உறுதி செய்ய சிறந்த வாய்ப்பாக இது அமையும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments