நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் சிறந்த உலக அணியை அறிவித்துள்ளார்.
இதில் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகதரம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணியில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்ஜாம்பவான் முத்தையா முரளிதரன், முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர் இடம்பெறவில்லை.
அதேபோல் தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கை கலக்கிக் கொண்டிருக்கும் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகியோரும் இடம்பெறவில்லை.
மெக்குல்லம் வெளியிட்ட அணியின் விபரம்
கிறிஸ் கெய்ல், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங், பிரைன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ், ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், மிட்செல் ஜான்சன், ஷேன் வார்னே, டிம் சவுத்தி, டிரெண்ட் பவுல்ட்.