இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணித்தலைவர் மேத்யூஸுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்தப் போட்டியில் அவர் 6 ஓவர்களை மட்டுமே வீசினார்.
இந்நிலையில் நேற்று உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்ற மேத்யூஸூக்கு 70 சதவீத தகுதிநிலை மட்டுமே வெளிப்பட்டது. இதனால் 2வது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2வது ஒருநாள் போட்டி பிர்மின்காமில் இன்று நடக்கவுள்ள நிலையில், போட்டிக்கு முன் நடத்தப்படும் உடற்தகுதி பரிசோதனையை வைத்தே மேத்யூஸ் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.