முரளிதரன், அப்ரிடி வரிசையில் இம்ரான் தாஹிர்!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
முரளிதரன், அப்ரிடி வரிசையில் இம்ரான் தாஹிர்!
619Shares

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ஆறாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 343 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் ஆம்லா 110, டுபிளெஸ்ஸிஸ் 73, டி காக் 71 ஓட்டங்கள் குவித்தனர்.

இதன்பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 38 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

சார்லஸ் மட்டும் அதிகபட்சமாக 49 ஓட்டங்கள் எடுத்தார். 9 ஓவர்கள் வீசி 45 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் இம்ரான் தாஹிர்.

தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதன்முறை.

ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் 7 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது மூன்றாவது முறை. அப்ரிடியும், முரளிதரனும் இதற்கு முன்பு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments