இந்திய அணித்தலைவர் டோனி உடற்பயிற்சி மையத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனிக்கு தற்போது 34 வயதாகிறது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட டோனி, ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிக்கலாம்.
என்ன தான் வயதானாலும் ஆடுகளத்தில் களைப்படையாமல் ஓடியே ஓட்டங்கள் சேர்ப்பது, சிக்சரால் வானவேடிக்கை காட்டுவது என தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார் டோனி. இதற்கு காரணம் எல்லாம் அவர் தனது உடலை உடற்பயிற்சி செய்து சிக்கென்று வைத்திருப்பதுதான்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் டோனி ஜிம்மில் எப்படி எல்லாம் “ஒர்க்-அவுட்” செய்கிறார் என்பது பதிவாகியுள்ளது.
MUST WATCH - #TeamIndia Captain @msdhoni's work out at gym - https://t.co/ySXAgmOqn9 #ZimvInd #Cricket
— BCCI (@BCCI) June 15, 2016