இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிட முடிவு செய்துள்ளார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இளம் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 18ம் திகதி தொடங்குகிறது.
இதன் பிறகு டோனி அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடுவார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் ஜிம்பாப்வே பயணத்தை அடுத்து நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்.
இந்நிலையில் கிட்டதட்ட 3 மாதத்திற்கும் மேல் டோனிக்கு ஓய்வு கிடைத்துள்ளது. தனது ஓய்வு நேரத்தை மகள் ஷிவாவுடன் செலவிட திட்டமிட்டுள்ளார் டோனி.
இது குறித்து டோனி கூறுகையில், டி20 தொடர் முடிந்த பிறகு எனக்கு நீண்ட நாள் ஓய்வு கிடைக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படியொரு ஓய்வு வருகிறது. எனவே இந்த ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிட முடிவு செய்துள்ளேன்.
எனது மகள் ஷிவா இன்னும் என்னிடம் சரியாக வர மறுக்கிறாள். தந்தையாகிய நான் அவளுடன் அதிக நாட்கள் இருந்ததில்லை. அதனால் தற்போது அவளோடு நேரம் செலவிடப் போகிறேன். அவளும் என்னை அடையாளம் அது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.