இலங்கை துடுப்பாட்ட வீரர் திரிமன்னே தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அணித்தலைவர் மேத்யூஸ் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது.
இந்த தொடரில் இடம்பெற்றிருந்த திரிமன்னே 5 இன்னிங்சில் 87 ஓட்டங்களே எடுத்திருந்தார். அவரது அதிகபட்சம் 22 ஓட்டங்களாகவே இருந்தது.
அதேசமயம் சகலதுறை வீரராக அசத்திய சுழல்பந்துவீச்சாளர் ஹேரத் அதிகபட்ச 61 ஓட்டங்களுடன் மொத்தம் 109 ஓட்டங்களை குவித்தார்.
திரிமன்னே சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டே வருகிறது.
தற்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.
இது பற்றி இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் கூறுகையில், ஒருநாள் போட்டிகளில் திரிமன்னே சிறப்பாக செயல்படுவார். கடந்த 2 வருடங்களாகவே சராசரியாக 40 ஓட்டங்களை அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தான் அவருக்கு நேரம் சரியாக அமையவில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் நல்ல நிலையிலே இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும், எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய லார்ட்ஸ் டெஸ்டில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.