அழகால் கிறங்கடிக்கும் கிரிக்கெட் தொகுப்பாளினிகள் இவர்கள் தான்

Report Print Basu in கிரிக்கெட்
அழகால் கிறங்கடிக்கும்  கிரிக்கெட் தொகுப்பாளினிகள் இவர்கள் தான்

கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்களின் அதிரடிகள் ரசிகர்களை எந்த அளவு ஈர்க்கிறதோ, அந்த அளவு போட்டிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் முக்கியமாக பார்க்கப்படுகிறார்கள்.

இதில் பெண் தொகுப்பாளர்களே ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காகவே போட்டிகளை பார்ப்பவர்களும் அதிகம். அவர்கள் தங்களின் கிறங்கடிக்கும் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் முன்னணியில் இருக்கும் சில தொகுப்பாளர்கள் மற்றும் நிருபர்களை பற்றி பார்க்கலாம்.

ரோசெல்லே ராவ்

இவர் 2012ம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா, சர்வதேச மற்றும் இந்தியாவின் மொடலான அறிவிப்பளார் என முடிசூட்டப்பட்டார். ஐபிஎல் 2012 தொடரில் பல போட்டிகளை தொகுத்து வழங்கிய ரோசெல்லே ராவ் விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமானார்.

மந்திரா பேடி

இவர் கடந்த 2003 மற்றும் 2007ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சோனி டி.வி தொகுப்பாளராக திகழ்ந்தார். 2010ல் பிரிட்டிஷ் டி.வியான ஐடி.விக்கு ஐபிஎல் போட்டியை தொகுத்து வழங்கினார்.

மெல் லாப்லின்

அவுஸ்திரேலியா டி.வி சேனல் 9 செய்தியாளரான மெல் லாப்லின், கிறிஸ் கெய்லின் விமர்சனத்தினால் ஏற்பட்ட சர்ச்சையின் மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்தார். அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஏ-லீக் கிரிக்கெட் போட்டியின் தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

சோனாலி நாகராணி

2003ம் ஆண்டு மிஸ் இந்தியா சர்வதேச பட்டத்தை வென்ற சோனாலி, ஐசிசி 2003 உலகக்கிண்ணத்தை கொமடியன் சைரஸ் ப்ரோச்ச உடன் இணைந்து தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார்.

கரிஷ்மா கோடக்

பிக் பாஷ் 6ல் ஒரு போட்டியாளரான கரிஷ்மா, தற்போது ஒரு இந்திய மொடல், நடிகை, மற்றும் டிவி தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். அவர் ஐபிஎல் 6 இணை தொகுப்பாளராகவும் திகழ்ந்தார்.

ஈஷா குஹா

பெங்காலியில் பிறந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான ஈஷா, ஒரு உணர்ச்சி மிக்க கிரிக்கெட் பத்திரிகையாளர், கிரிக்கெட் குறித்து கட்டுரைகளை எழுதியுள்ளார். 2012ல் அவர் ஐபிஎல் இணை வர்ணனையாளராக ஐ டிவியில் சேர்ந்தார். அவரது கட்டுரை கிரிக் இன்ஃபோவில் வெளியிடப்பட்டது.

அர்ச்சனா விஜயா

புகழ்பெற்ற இந்திய பெண் கிரிக்கெட் தொகுப்பாளரான அர்ச்சனா, ஒரு மிகச் சிறந்த பத்திரிகையாளர். பின்னர் அவர் ஐபிஎல் விட்டு விட்டு நியோ ஸ்போர்ட்ஸ் டி.வியில் சேர்ந்தார். அவர் உலகம் முழுவதும் பல கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மாயன் திலாங்கர்

இந்தியாவின் புகழ் பெற்ற பெண்கள் விளையாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவரான மாயன்தி, இஎஸ்பிஎன்-னில் கால்பந்து ஒளிபரப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் சர்வதேச போட்டிகளில் ஒரு கிரிக்கெட் தொகுப்பாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வியில் சேர்ந்தார். மாயன்தி இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி ஆவார்.

2/5

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments