ஐபிஎல் வருமானம் எத்தனை கோடி தெரியுமா?

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
ஐபிஎல் வருமானம் எத்தனை கோடி தெரியுமா?

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் மொத்தம் ரூ.2500 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் பல்வேறு வகையான விளம்பரங்களின் மூலம் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.

முதன்மை ஸ்பான்சர்ஷிப் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.220 முதல் ரூ.250 கோடியை பெற்றது.

மேலும், டெலிவிசன் விளம்பரங்கள் மூலம் சோனி பிச்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி கிடைத்தது.

அதேபோல் இந்த தொடரில் விளையாடிய 8 அணிகளும் விளம்பரங்கள் மூலம் ரூ.200 முதல் ரூ. 230 கோடி வருவாயை சம்பாதித்தன. டிக்கெட் விற்பனை மூலம் ரூ.150 முதல் ரூ.160 கோடி வரை கிடைத்தது.

ஐபிஎல் போட்டியை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு ரூ.820 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு ரூ.8,200 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மூலம் பெறப்பட்டுள்ள வருமானம் கடந்த ஐபிஎல் போட்டியைவிட மிகவும் அதிகமாகும்.

இது ஆண்டுக்கு ஆண்டு 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து வருவதாக போட்டி அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments